பள்ளியில் "பிலீவர்" பாடலை பாடி அமெரிக்காவை அசத்திய மாணவிகள்

பெங்களூரு பள்ளி ஒன்றில் மாணவிகள் பிலீவர் பாடலை பாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


அமெரிக்காவின் பிரபல இசைக்குழுவான இமேஜின் டிராகன்களின் பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக அந்த குழு வெளியிட்ட பிலீவர் என்ற பாடல் உலகளவில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் இந்த பாடலை காலையில் அசெம்பிளியின் மாணவர்கள் இசை இசைத்துப் பாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைலராகி வருகிறது.


மாணவர்கள் சீருடையுடன் இந்த நிகழ்ச்சிக்காகப் பாடும் வீடியோ சுமார் 9 லட்சத்திற்கு அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதைப் பாடிய இமேஜின் டிராகன் குழுவிற்குச் சென்றடைந்தது. அவர்கள் இதற்கு "லவ் திஸ்" எனப் பதிலளித்துள்ளனர்.