ஜப்பான் டோக்கியோவைச் சேர்ந்த பியாலா இன்க் என்ற மார்கெட்டிங் நிறுவனம் ஒன்று சமீபத்தில் தங்கள் ஊழியர்களுக்கு ஒரு வித்தியாசமான சலுகையை அறிவித்துள்ளது. அந்த சலுகை தற்போது பலரது கவனத்தை ஈர்த்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
15 நிமிட செலவு
இந்த நிறுவனத்தின் அலுவலகம் ஒரு பெரிய கட்டிடத்தின் 29வது மாடியில் செயல்பட்டு வருகிறது. இந்த மாடியில் பணியாற்றும் ஊழியர்கள் சிகரெட் பிடிக்க வேண்டும் என்றால் தரை தளத்திற்கு வந்து செல்ல வேண்டும். ஒரு நாளுக்கு ஒருமுறை சிகரெட் பிடிக்கக் குறைந்தது 15 நிமிடமாவது அவர்கள் செலவு செய்ய வேண்டும்.
வசதியில்லை
அந்நிறுவனத்திற்கு தங்கள் ஊழியர்கள் சிகரெட் பிடிப்பதற்காக நேரத்தை வீணாக்குவது பிடிக்கவில்லை மேலும் அந்த கட்டிடத்தில் குறிப்பிட்ட அந்த அலுவலகம் இருக்கும் இடத்திலேயே சிகரெட் பிடிப்பதற்காக வசதியும் இல்லை. இதனால் முதலில் அந்நிறுவனம் சிகரெட் பிடிக்கச் செல்ல அனுமதி மறுத்தது. மேலும் ஊழியர்களை சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடும் படி அறிவுறுத்தியது