திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பாண்டியராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் காமாட்சிபுரம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையோரம் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மோதிவிட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் காவலரை சூழ்ந்து கொண்டனர். அப்போது காவலர் பாண்டியராஜன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
காவலர் மதுபோதையில் தகராறு செய்து தர்ம அடி வாங்கிய சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்துகிறது